நடிகர் விஜயின் லியோ வெற்றி விழா சிறப்பாக நடந்து முடிந்தது. அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த அந்த குட்டி ஸ்டோரி விழாவை மேலும் சிறப்பாக்கியது. என்னடா இது? குட்டி ஸ்டோரியை மிஸ் பண்ணிட்டோமே என்ற வருத்ததில் இருந்த ரசிகர்களை விஜய் இந்த வெற்றி விழாவின் போது குதூகலப்படுத்தி விட்டார். இதனிடையில் நடிகர் விஜயகாந்த் குறித்தும் விஜய் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது.
நிறைய விஷயங்களை இந்த சக்சஸ் மீட்டில் விஜய் பேசியிருந்தார். மறைமுகமாக தனது அரசியல் வருகை இப்படித்தான் இருக்கும் என்று சொல்லியிருந்தார். அப்பா சட்டையை மகன் போட ஆசைப்படக் கூடாதா? அப்பா சேரில் உட்கார கூடாதா? என்ற கேள்விக்கு பின்னாடி ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. திரையுலகை சார்ந்தவர்கள் ரஜினியை குறிப்பிட்டுத்தான் சொல்கிறார் விஜய் என்று நினைப்பார்கள். ஒரு சாரார் அந்த இடத்திற்கே விஜய் ஆசைப்படுகிறாரோ என்று நினைப்பார்கள்.
மேலும் ரசிகர்களிடமும் ‘ நான் சோசியல் மீடியாக்களை கவனித்து வருகிறேன். ஏன் இவ்ளோ கோவம் உங்களுக்கு. நமக்கு அது வேலை இல்லை. நமக்கான வேலை நிறைய இருக்கு’ என்று கூறி அரசியலில் எப்படி இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், நடிகர் திலகம்னா ஒருத்தர்தான், கேப்டன்னா ஒருத்தர்தான், உலக நாயகன்னா ஒருத்தர்தான், சூப்பர்ஸ்டார்ன்னா ஒருத்தர் தான், தலன்னா ஒருத்தர் தான் என அனைத்து நடிகர்களையும் அவர்களது ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும் வகையில் பேசிய இந்த பேச்சை கவனித்த நெட்டிசன்கள்.
நடிகர்களுக்கான பட்டங்கள் தொடர்பாக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என வரிசையாக அடுக்கியதும் அந்த பட்டியலில் அஜித்தை சேர்த்து பாராட்டியதும் கூட விசயமில்லை. அந்த வரிசையில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தை தவறாமல் குறிப்பிட்டதுதான் விஜயின் நேர்த்தி என்று குறிப்பிட்டு விஜயை கொண்டாடி வருகிறார்கள் விஜயகாந்த் ரசிகர்கள்.
Listen News!