• Jan 18 2025

இன்டெர்ஸ்ட் இருக்கா? இல்லையா? - பிக்பாஸ் வீட்டில் புதிதாக மலர்ந்த காதல்! கெமிஸ்ட்ரி ஒர்க்காகும் போல..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் தற்போது ஏராளமான  ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதற்கு காரணம் இந்த சீசனில் அதிகமான இளைஞர்களை  பார்க்க முடுகிறது. 

அதன்படி, பிக்பாஸ் போட்டியாளர்களிடையே ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக இருந்தாலும் டாஸ்க் என்று வரும் போது சரியான முறையில் விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் மோதல் மட்டுமின்றி காதலும் தலை தூக்கியுள்ளது. ஏற்கனவே 2 ஜோடிகள் வலம் வரும் வேலையின் தற்போது மற்றுமொரு காதல் ஜோடி புதிதாக மலர்ந்துள்ளது.


அதன்படி, பூர்ணிமாவுக்கு அவ்வப்போது தூண்டில் விட்டு பார்த்த விஷ்ணு நேற்று பூர்ணிமாவுடன் தனியாக உட்கார்ந்து பேசும் போது 'இன்டெர்ஸ்ட்  இருக்கா இல்லையா? ' என கேட்கிறார். அதற்கு பூர்ணிமா குனிந்த தலை நிமிராமல் தரையையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு விஷ்ணு 'என்ன எதாவது சொல்லு' என கேட்கிறார்.


இதையடுத்து,  ஹாலில் இருந்த அக்‌ஷயாவுடன் பேச்சுக் கொடுக்க முயன்ற பூர்ணிமாவை 'என்ன கவனத்தை திசை திருப்புறீயா? இல்ல மறைக்கிறீயா?' என்று விஸ்ணு கேட்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement