• Apr 22 2025

முதல் வணக்கம் நிகழ்ச்சியில் சிறகடிக்க ஆசை முத்து! ப்ரோமோவை வெளியிட்ட விஜய் டிவி!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

புது புது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் விஜய் டீவியை அடிக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். குக்வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகளை வழங்கும் விஜய் டிவி முதல் வணக்கம் என்னும் ஒரு நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றது.


சினிமாக்கள் , நாடகத்தொடர்கள் , நிகழ்ச்சிகள் என பல வற்றில் பிரபலமாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்களின் வாழ்க்கை பயணத்தை அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் மேற்கொண்டு பகிர்ந்து கொள்வதே இந்த நிகழ்ச்சி ஆகும்.


இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சியில் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் ஊடாக பிரபலமாகிய முத்து கலந்து கொள்ள உள்ளார். குறித்த சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது.  

Advertisement

Advertisement