• Jan 19 2025

ரிலீஸிற்கு தயாராகும் அருள் நிதியின் "டிமான்டே காலனி -2".எப்போ ரிலீஸ்னு தெரியுமா ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஆர். அஜய் ஞானமுத்து இயக்கி அருள்நிதி முக்கிய வேடத்தில் நடித்து வெளியான தமிழ் மொழி திகில் திரைப்படமான "டிமான்டே காலனி" நேர்மறையான விமர்சங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆனது.

Ajay Gnanamuthu's 'Demonte Colony 2 ...

இந்த படத்தின் வெற்றி 2022 ஆம் ஆண்டு இதே கூட்டணி மீண்டும் இணைந்து  "டிமான்டே காலனி -2"  என்ற தலைப்பில் ஒரு தொடர்ச்சி கதையுடனான திரைப்படம் ஆரம்பிக்கப்படுவதாக செய்தி வெளியானது.தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளியாகிய "டிமான்டே காலனி -2" படத்தின் ட்ரைலர் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது.

Demonte Colony 2 - IMDb

இந்நிலையில்  "டிமான்டே காலனி -2" திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. "டிமான்டே காலனி -2" திரைப்படமானது வருகிற  மாதம் முதல் வாரமளவில் திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement