• Jan 18 2025

ஒட்டிங் அடிப்படையில் அசைக்க முடியாத இடத்திற்கு வந்த அர்ச்சனா; மரண பீதியில் குள்ளநரிகள்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வரலாற்றில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி முதலிடத்தில் காணப்படுகிறார். குறித்த தகவல் தற்போது கிடைத்த ஒட்டிங் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகிவிட்டது.  தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா தனக்கு ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என கூறியுள்ளார். 


வழமையாக பிக் பாஸ் சீசனின் பாதியில் தான் புது போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே செல்வார்கள். ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு கூட விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், உள்ளே சென்ற ஐந்து போட்டியாளர்களில் அர்ச்சனாவும் ஒருவராக உள்ளார். அவர் பங்குபற்றிய முதல் நாளே மாயா அவரை அழவைத்ததை நாம் அறிவோம்.  அர்ச்சனாவை டார்கெட் செய்து இரண்டு வாரத்தில் வெளியே அனுப்புவேன் என மாயா கூறியுள்ளார். மற்றோரு பக்கம் விசித்ராவும் வம்பிழுத்து கொண்டுள்ளார்.


அத்துடன், இன்றைய தினம் நடக்கும், கேப்டன்ஸி டாஸ்கில் மாயா வெற்றி பெற்றால் வைல்ட் கார்ட் போட்டியாளர்களை மீண்டும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இவ்வாறான நிலையில் இன்று வெளியாகியுள்ள புரோமோவில், தனக்கு ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்க பிடிக்கவிலை என்பதை வெளிப்படையாக அர்ச்சனா  கூறியுள்ளார்.பிக்பாஸ் போட்டியாளர்கள் 'நீ சோம்பேறி, போரிங் கண்டெஸ்டண்ட் என சொல்லி நம்மை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி இருந்தால், அது Fair கேம். ஆனால் வைல்ட் கார்டாக வந்ததற்காக அனுப்பியது அன் unfair கேம் என கூறுகிறார். இதற்கு கானா பாலா நீ அங்கிருந்தா என்ன பண்ணுவ என கேட்ட, 'அவங்கள போலவே விளையாடி இருப்பன்' என எதார்த்தமாக பேசியுள்ளார்.

அதேவேளை தற்போது வெளியான ஒட்டிங் அடிப்படையில் ஒன்டரை லட்சம் வாக்குகளை பெற்று பிரதீப்பை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளார் அர்ச்சனா. அடுத்து தினேஷ், மணி, மாயா ஆகியோர் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர்.

இதேவேளை, பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அர்ச்சனா சிறு சிறு விஷயங்களுக்கும் அழுது வருகிறார். எனினும் இவரது சிறுபிள்ளை தனத்தை ரசிகர்கள் ரசிக்காமல் இல்லை.


 

Advertisement

Advertisement