• Nov 12 2024

மாயா கேங்கை சாதுர்யமாக உடைத்த அர்ச்சனா! விசித்திராவுடன் கூட்டிணைந்த மற்றொரு போட்டியாளர்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது  வெற்றிகரமாக 6-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

இவ்வாறான நிலையில், பிக்பாஸ் மந்தையில் இருந்து பிரிந்திருந்த இரண்டு ஆடுகள் தற்போது ஒன்று சேர்ந்துள்ளது.அதாவது விசித்திரா மற்றும் ஐஷூ இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.


அதன்படி, பிக் பாஸ் வீட்டில் அழு மூஞ்சாக காணப்பட்ட அர்ச்சனா தற்போது  விறுவிறுப்பாக தனது ஆட்டத்தை விளையாடி வருகிறார். அதன்படியே தாயான விசித்ராவும்  மகளான ஐஷூவும் பிரிந்திருப்பதைக் காணச் சகியாத நிலையில், அவர்களை சேர்ப்பதற்கான சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். 

அத்துடன், இருவரையும் சேர்த்து வைப்பது மட்டுமல்ல, இதன் மூலம் மாயா கேங்கை உடைப்பதற்கான உத்தியாகவும் இதைப் பார்க்கலாம்.  


மேலும்,  ஐஷூவுடன் சேர்ந்த விசித்திரா 'நிக்சன் விஷயத்துல கவனம் செலுத்தாம ஆட்டத்துல கவனம் செலுத்து' என்று அவருக்கு உபதேசமும் செய்துள்ளார்.

ஆகவே மாயா கேங்கில் இருந்து ஐஷூ விலகி சென்று தனது ஆட்டத்தை இனி என்றாலும் சரிவர விளையாடுவாரா என ரசிகர்கள் கூடுதலாக எதிர்பார்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement