• Mar 14 2025

சிவகார்திகேயனுக்காக ராக்கெட் வேகத்தில் செல்லும் AR முருகதாஸ்.! வெளியான தகவல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 350 கோடிகள் வரை வசூலித்து இருந்தது. நாட்டிற்காக வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வாழ்ந்தே காட்டியுள்ளார்.

இந்த படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் அவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு அவருடைய மார்க்கெட் உயர்வதற்கும் காரணமாக காணப்படுகிறது.

தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இவருடைய படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுப்பதால் இதனை வாங்குவதற்காக பல விநியோகஸ்தர்களும் போட்டி போட்டு வருகின்றார்கள்.


இந்த நிலையத்தில், வலைப்பேச்சு அந்தணன் ஏ. ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்திற்கு ராக்கெட் வேகம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி அவர்கள் கூறுகையில், சிவகார்த்திகேயன் நடிக்கும்  திரைப்படம் 75% கடந்துவிட்டது. அடுத்த மாதம்  20ஆம் தேதி உடன் சூட்டிங் எல்லாம்  முடிவடைய உள்ளன. 

முருகதாஸ் ஏற்கனவே சல்மான் கானை வைத்து ஒரு படத்தை  இயக்கி வருகிறார். ஆனாலும் இந்த படத்தை ஸ்பீடாக எடுத்து  முடித்துவிட்டு ப்ரொடியூசருக்கும் படத்தை போட்டு காட்டியுள்ளாராம்.

இன்டிராவல் வரைக்கும் இந்த படம் சூப்பராக இருந்ததாகவும் அவர் பயங்கர ஹேப்பி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இனிமேல் இயக்குனர்கள் தாம் இயக்கும் படத்தை தயாரிப்பாளர்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளனர். 

Advertisement

Advertisement