சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மகேஸ்வரியிடம் இருந்து வாங்கிய தூக்க மாத்திரைகளை விஜயாவுக்கு காப்பியில் கலந்து கொடுக்கிறார் ரோகிணி. ஆனால் அவர் கொடுத்த பிறகு தான் மகேஸ்வரி போன் பண்ணி அது தூக்க மாத்திரை இல்லை, விட்டமின் மாத்திரை இனிதான் அவங்க ஆக்டிவா காணப்படுவார் என்று சொல்லுகின்றார்.
அதன்படி விஜயா எனர்ஜிக்காக எழுந்து ரோகிணியை வேலை வாங்குகின்றார். மேலும் தான் அண்ணாமலை வரும் வரையில் பூஜை பண்ண வேண்டும், அதற்கு அருகில் இருக்குமாறு ரோகிணி அமர வைத்து அவருடைய தலையில் கொட்டுகின்றார். மேலும் அவருடைய கையில் கற்பூரம் ஏத்துகின்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்து, அண்ணாமலை நாளை காலை வருவார் என பொய் சொல்லுகின்றார். இதனால் விஜயா ரோகிணியை விட்டு விடுகின்றார்.
மறுநாள் காலையில் விஜயா வாசலை பார்த்துக் கொண்டிருக்க உண்மையை சொல்ல முன் வருகின்றார் முத்து. எனினும் தயங்கி தயங்கி நிற்க, அந்த நேரத்தில் அண்ணாமலை வருகின்றார் . இதை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
மேலும் வாசலில் வைத்தே முத்து அவரை கட்டி அணைத்து அழுகின்றார். அதன் பின்பு விஜயாவும் அண்ணாமலையைப் பிடித்து அழுகின்றார். இதன் போது அந்த இடத்திற்கு கந்து வட்டிக்காரர் வருகை தருகின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!