• Feb 20 2026

ஜெயிலுக்கு செல்லும் பாண்டியன் குடும்பம்... செய்வதறியாது தவிக்கும் மீனா.! டுடே ரிவ்யூ

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, காந்திமதி வீட்ட பொலிஸ் போய் பாக்கியம் சொன்னது எல்லாம் உண்மையா என்று விசாரிக்கினம். அப்ப காந்திமதி பொலிஸ் கிட்ட கோமதி மருமகளுக்கு எந்த ஒரு கெடுதலும் செய்ய மாட்டா என்கிறார். பின் சக்திவேலோட மனைவி மயில் வீட்டுக்காரங்க தான் எல்லா விசயத்திலயும் பொய் சொல்லியிருக்கிறாங்க என்கிறார். 

அதனைஅடுத்து பொலிஸ் அங்கிருந்த ஆட்கள் எல்லாருகிட்டயும் கோமதி குடும்பத்தைப் பற்றி விசாரிக்கினம். அப்ப எல்லாரும் கோமதி குடும்பத்தைப் பற்றி நல்ல மாதிரி சொல்லுறார்கள். பின் சரவணன் இந்தப் பிரச்சனைக்கு காரணம் நான் தான் மற்றவங்கள வீட்ட விடுங்க என்று இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுறார். அதைப் பார்த்த கோமதி சரவணன் கிட்ட அமைதியா இருக்கச் சொல்லுறார்.


அதைத் தொடர்ந்து முத்துவேல் இன்ஸ்பெக்டர் கிட்ட அக்கம் பக்கத்தில விசாரிச்சு பொய் கம்பிளைன்ட் தான் கொடுத்திருக்காங்க என்று தெரிஞ்சிட்டுத் தானே அவங்களை விடுங்க என்கிறார். அதுக்கு இன்ஸ்பெக்டர் நாங்க இதை சாதாரணமா விட முடியாது விசாரிக்கத் தான் வேணும் என்கிறார். பின் இரவு எல்லாரையும் ஜெயிலுக்கு அனுப்பிடுவோம் என்கிறார்.

அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் ராஜியையும் அரிசியையும் வீட்ட கூட்டிக் கொண்டு போகச் சொல்லுறார் இன்ஸ்பெக்டர். அதைக் கேட்ட பாண்டியன் மயிலை பெத்த பொண்ணு மாதிரி நினைச்சதை விட வேற எந்த தப்பும் பண்ணல என்று சொல்லி அழுகிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement