• Jan 18 2025

ஒரே நாளில் கோடிகளில் வசூல் சாதனை செய்த அமரன் திரைப்படம்!உலகளவில் இத்தனை கோடியா?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் நேற்று தீபாவளியினை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் தான் அமரன் பிரபல பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார்.


இராணுவ வீரர்களின் உண்மை கதையை ஒட்டி தயாரிக்கப்பட்ட இப்படமானது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் உலகளவிய ரீதியில் அமரன் திரைப்படம் வெளியாகிய முதல் நாள் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து செய்தி வெளியாகியுள்ளது .


இதுவரை சிவகார்த்திகேயன் படத்திற்கு கிடைக்காத வசூல் இப்படத்திற்கு கிடைத்துள்ளது அதாவது நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ஒரே நாளில் உலகளவில் 42.3 கோடி வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement