விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட நிகழ்வுகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இன்று ஆரம்பமாகியுள்ளது. சமையல் காமெடி என மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் புது கோமாளிகள் பலரும் குக் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். அந்த வரிசையில் புது கோமாளியாக பிக்போஸ் சவுந்தர்யா கலந்து சிறப்பித்து வருகின்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக லக்சுமி ராமகிருஷ்ணன் ,ஷாபனா ஷாயகன் ,ப்ரியா ராமன் ,உமைர் லடேப் , கஞ்சா கறுப்பு கலந்து கொள்ளவுள்ளதுடன் அமரன் படத்தில் இராணுவ வீரராக நடித்த உமைர் இப்னு லத்தீஃப் என்பவரும் சமையல் செய்து கலக்க இருக்கின்றார்.
மிகவும் சுவாரஸ்யத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளதுடன் பெரும்பாலான சவுந்தர்யா ரசிகர்கள் நிகழ்ச்சிக்காக காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் ஒரு சில யூடியூபர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளமை சிறப்பிற்குரியது.
Listen News!