• Jun 26 2024

நான் வேறு.. அப்பா வேறு..! நானெல்லாம் எம்மாத்திரம்..? தரமான பதிலடி கொடுத்த சூர்யா

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் விஜய், சூர்யா, விஜய் சேதுபதி போன்றவர்களின் வாரிசுகள் தற்போது நடிகர், நடிகைகளாக காலடி எடுத்து வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதன் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான். சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சூர்யாவும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் படத்தில் நடித்துள்ளார்.


இந்த நிலையில், அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பேசிய நீங்கள் பீனிக்ஸ் படத்தின் ப்ரோமோஷனுக்கு எதற்காக அப்பாவை அழைத்தீர்கள் என்று செய்தியாளர்கள் சூர்யாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், தந்தையர் தினத்தில் அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புகிறேன். அதனால்தான் அப்பாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து சப்ரைஸ் கொடுத்தேன். அப்பா மட்டும் வரவில்லை என்னுடைய அம்மா, சகோதரி என எல்லாரும் வந்துள்ளார்கள்.

மேலும் அப்பா வேறு நான் வேறு என்று பேசியதுக்கு நிறைய மீம்ஸ், ட்ரோல்களை நான் பார்த்தேன். பெரிய பெரிய ஆட்களுக்கு எல்லாமே ட்ரோல் குவிக்கின்றது. நானெல்லாம் எம்மாத்திரம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement