பாக்கியலட்சுமி சீரியலில் இன்று,கோபி இண்டையோட வீட்ட விட்டுக் கிளம்புறேன் என்று சொல்லுறார். இதைக் கேட்ட ஈஸ்வரி எதுக்கு நீ இப்ப திடீர் என்று இப்படி ஒரு குண்ட தூக்கிப் போடுற என்று கேக்கிறார். மேலும் வீடென்றா சில பிரச்சனைகள் வரத் தான் செய்யும் அதுக்காக வீட்ட விட்டுப் போறதா என்று கேக்கிறார். இதன் போது செழியன், பாட்டி அவருக்கு எங்க இருக்கோனும் என்று தோணுதோ அங்கேயே இருக்கட்டும் என்கிறார்.
அதுக்கு ஈஸ்வரி நீங்க எல்லாரும் இங்க வரனும் என்று உங்கட அப்பா தான் பாடுபட்டாரு இப்ப அவரையே வெளில போக சொல்லுறீங்களா என்று கேக்கிறார். ஈஸ்வரி கோபியப் பாத்து வீட்ட விட்டுப் போய் எங்க இருக்கப் போற என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா எத்தினையோ தடவ என்னப் பாத்து நல்ல புருஷன் இல்லை என்று சொல்லியிருக்காள் ஆனா என் பசங்க என்னைப் பார்த்து அப்படிச் சொன்னது தான் கவலையா இருக்கு என்றார்.
மேலும் என்னோட பசங்க அப்பா மேல கொஞ்சமாவது பாசம் காட்டலாம் என்று சொல்லி அழுகுறார். இதைக் கேட்ட ஈஸ்வரி இப்படி எல்லாம் பேசாதடா என்று சொல்லுகிறார். அப்படியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள்.
மறுநாள் செல்வியோட புருஷன் வந்து பாக்கியா வீட்ட இருந்த எல்லாரோடயும் சண்ட பிடிச்சுக் கொண்டிருக்கிறார். இதன்போது செழியன் அவரை வெளிய போகச்சொல்லிச் சொல்லுறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி பொலிஸைக் கூப்பிடச் சொல்லிச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!