நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படக்கூடிய ஒரு பிரபல நடிகையாக காணப்படுகின்றார். ஆரம்பத்தில் கிராமிய கதைகளில் கதாநாயகியாக நடித்த இவர், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியம் கொடுக்கும் படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றார்.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் ஒரு குழுவுடன் இணைந்து சாலையோரங்களில் உறங்குவதற்கு போர்வை இல்லாமல் படுத்து உறங்கியவர்களுக்கு போர்வை வாங்கி கொடுத்து உதவியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தெருவில் இருந்தவர்கள் போர்வை இல்லாமல் உறங்குவதை அவதானித்த ஐஸ்வர்யா ராஜேஷ், போர்வையை வாங்கி அங்குள்ளவர்களுக்கு அவரே போர்த்தும் விட்டு உள்ளார்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த செயலை பார்த்த பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.. மேலும் ஒரு போர்வையின் குறைந்த விலை 35 ரூபாய். உங்களால் முடிந்தால் நிச்சயமாக ஹெல்ப் பண்ணுங்க என்று மக்களின் உதவியையும் நாடி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Listen News!