தமிழ் சினிமாவில் காமெடியர்களாக இருந்தவர்கள் ஹீரோவாக களமிறங்கி வெற்றி கண்டு வருகின்றனர். நகைச்சுவை நடிகர்களாக வலம் வந்த சந்தானம், சூரி, சதீஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் தற்போது கதையின் நாயகன்களாக அவதாரம் எடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
அந்த வகையில் சந்தானம் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடிக்கின்றார். இவர் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுபோலவே திரில்லர் படமான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதுபோலவே நடிகர் யோகி பாபுவும் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.
இந்த வரிசையில் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக இணைந்துள்ளார். இவர் காஞ்சூரிங் கண்ணப்பன், நாய் சேகர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோருடன் காமெடியில் கலக்கியிருந்தார்.
இந்த நிலையில், தனுஷ் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார் நடிகர் சதீஷ். அதில் அவர் கூறுகையில், எனக்கு பெரிய லைப் கொடுத்தது தனுஷ் சார் தான்.
எதிர்நீச்சல் படத்தை ப்ரொடியூஸ் பண்ணி லைஃப் ஏற்படுத்திக் கொடுத்தார். படத்தோட வெற்றியை கொண்டாட அவ்வளவு பணம் செலவு பண்ணி பிளைட்ல எங்களை பிசினஸ் கிளாஸ்ல டிக்கெட் போட்டு லண்டன் கூப்பிட்டு போனாரு.
வாழ்க்கையில நாலு நாள் ரொம்ப ஜாலியா இருந்த நாட்கள் அது என்று கூட சொல்லலாம். எங்களை சந்தோஷப்படுத்தி அவர் சந்தோஷப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
Listen News!