• Jan 19 2025

கமல்ஹாசன், சரத்குமாரை முந்திய விஜய்.. அரசியலிலும் சுறுசுறுப்பை காட்டும் விஜய்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கமல்ஹாசன் மற்றும் சரத்குமாரை விட சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நேற்று படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சம்பவத்திற்கு திரை உலகில் முதல் நபராக விஜய் தான் கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

விஜய்க்கு பின்னர் தான் கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியீட்டுள்ளனர். எனவே சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது போலவே அரசியலிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு விஜய் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

கமல்ஹாசன் அறிக்கை:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப்  பேரிழப்பாகும். 

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சரத்குமார் அறிக்கை:

சென்னை பெரம்பூரில் வசிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் தனது குடியிருப்புக்கு அருகே சிலருடன் பேசிக் கொண்டிருக்கையில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்கள், அவரை அரிவாளால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், மாலை 07.30 மணியளவில் பொதுவெளியில், தேசிய இயக்கத்தின், மாநில தலைவர் பொறுப்பில் உள்ளவர்க்கு ஏற்பட்ட இந்த நிலை மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்.


சமூகத்தில் கொலைச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதற்கு சமம். காவல்துறை கொலையாளிகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கை வேண்டும். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடனடியாக மேற்கொள்ள அவர்களின்

குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement