• Jan 19 2025

சித்தார்த்துக்கு அதிதிராவ் போட்ட கண்டிஷன்கள்.. ஒப்புக்கொண்டதால் தான் திருமணமே..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சித்தார்த், அதிதிராவ்  திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்பதும் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே சித்தார்த், அதிதிராவ் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள் என்றும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்கள் என்றும் செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகின.

இந்த நிலையில் இருவருக்கும் இன்னும் ஒரு சில மாதங்களில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று கோலிவுட்டில் பரவி வருகிறது. சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவருமே காதலித்து வந்தாலும் திருமணத்திற்கு அதிதி ராவ் சில நிபந்தனைகள் விதித்ததாகவும், அந்த நிபந்தனைகளுக்கு சித்தார்த் ஒப்புக் கொண்டதால் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. 

குறிப்பாக அதிதிராவ்  திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு தடை விதிக்க கூடாது என்றும், எந்த கிளாமர் பாத்திரங்களை தேர்வு செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்றும், படப்பிடிப்பு எந்த மாநிலத்தில் எந்த நாட்டில் நடந்தாலும் தான் செல்வதற்கு தடை விதிக்க கூடாது என்றும் கண்டிஷன்கள் போட்டதாகவும் அதற்கு சித்தார்த் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தகவல் சித்தார்த்தின் மிக நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த நிலையில் தற்போது இணையதளம் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சித்தார்த் மற்றும் அதிதிராவ் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தை சித்தார்த் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement