கடந்த பல ஆண்டுகளாக விஜய்யின் பிசினஸை தொடுவதற்கோ அல்லது முந்துவதற்கோ அஜித் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை அவரால் முடியாத நிலையில் சூர்யா அதை அசால்ட்டாக செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ]
நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘கோட்’ படத்தின் பிசினஸ் ஆரம்பித்து விட்ட நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் இந்த படத்திற்கு 80 கோடி ரூபாய் ஓடிடி வியாபாரம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சூர்யா நடித்த ’கங்குவா’ படத்தின் ஓடிடி பிசினஸ் ’கோட்’ படத்தை விட அதிகமாக ஆகி இருப்பதாகவும் அதாவது அமேசான் நிறுவனம் இந்த படத்தை 90 கோடி ரூபாய்க்கு பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையின் தொகை உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கோலிவுட் வட்டாரத்தில் இந்த தகவல் பரபரப்பாக பரவி வருகிறது.
முதல் முறையாக விஜய் படத்தின் பிசினஸை சூர்யா படத்தின் பிசினஸ் மிஞ்சி விட்டதாகவும் அஜித்தால் கூட செய்ய முடியாத இந்த சாதனையை சூர்யா அசால்ட்டாக செய்துவிட்டதாகவும் திரையுலகினர் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ’கோட்’ படத்தின் மொத்த பிஸினஸை விட சூர்யாவின் ’கங்குவா’ படத்தின் பிசினஸ் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக ரிலீஸ் உரிமை உள்பட அனைத்து உரிமைகளும் இந்த படம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகும் என்பதால் இந்த படத்தை பொருத்தவரை விஜய்யை சூர்யா முந்தி விடுவார் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை அஜித்தால் கூட விஜய்யின் பிசினஸை முந்த முடியாத நிலையில் சூர்யா முந்திவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!