• Jan 18 2025

குடிக்க தண்ணி கூட தரல்ல.. புலம்பிய அதிதி ஷங்கர்.. ‘இந்தியன் 2’ ஆடியோ விழா சொதப்பலா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த ’இந்தியன் 2’ படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடந்தது.

இதில் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ஷங்கரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பாக நடிகை அதிதி ஷங்கர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவுக்கு வந்த அதிதி ஷங்கரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தபோது அவர் ’ஏன் எல்லோரும் ரொம்ப சோர்வாக இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது ’நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களுக்கு தண்ணீர் கூட தரவில்லை’ என்று கூறினர். அப்போது அதிதி ஷங்கர் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தண்ணீர் தர ஏற்பாடு செய்வார் என்று பார்த்தால் அவர் 'எனக்கே தண்ணீர் வரவில்லை’ என்று கூறி அதன் பிறகு ஜோக்காக ’நான் குடிக்கிற தண்ணியை சொன்னேன்’ என்று கூறினார்.

பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த விஐபிகளுக்கு குடிக்க தண்ணீர் கூட தரவில்லை என்று பலர் புலம்பிய நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் சொதப்பி விட்டார்களா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சிலருக்கு வேண்டுமானால் தண்ணீர் தருவதற்கு மறந்து இருக்கலாம் என்றும் பெரும்பாலான விஐபிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் மேடையில் இருந்தவர்களுக்கும் தண்ணீர் அளிக்கப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement