• Jan 18 2025

நடிகர் அர்ஜுன் தாஸ் மீது அதிதி ஷங்கருக்கு திடீர் காதலா? ஷங்கர் என்ன சொல்வார்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் ஆகிய இருவரும் காதலர்களாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான  ’கைதி’ ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’ உள்ளிட்ட சில படங்களில்  வில்லன் ஆக நடித்த அர்ஜுன் தாஸ், ‘அநீதி’ உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது அவர் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகிய இருவரையும் வைத்து சில ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட போது இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்ததாகவும் இதையடுத்து இருவரும் நாயகன், நாயகி ஆக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இருவரும் இசை கலைஞர்களாக நடிப்பதாகவும்,  இசையால் இருவரும் தங்கள் மனதை பறிகொடுத்து காதலர்களாக மாறி அதன்பின் குடும்பத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ’விருமன்’ ‘மாவீரன்’ படங்களில் நாயகியாக நடித்த அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக அர்ஜுன் தாஸுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement