• Jan 19 2025

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தபின் பயந்துவிட்டார்.. ரஜினி பட நடிகர் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர், நான் அவர் மீது குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்த பின் பயந்துவிட்டார் என்று ரஜினிகாந்த் பட நடிகர் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் ஏற்கனவே பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’பொம்மலாட்டம்’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் ஏராளமான இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ளார் என்பதும் அவருடைய பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற திரைப்படத்தில் ஜோதி என்ற கேரக்டரில் நடித்த நடிகர் நடிகை தனுஸ்ரீ, நானா படேகருடன் ஒரு பாலிவுட் படத்தில் நடித்த அப்போது நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொதுவெளியில் கூறிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



இதற்கு நானா படேகர் பதிலளித்த போது, ‘இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்றும் அவருடைய குற்றச்சாட்டால் நான் கோபப்படவில்லை என்றும் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த நடிகை தனுஸ்ரீ, ‘நானா படேகர் பொய் சொல்லும் நோய் உள்ளவர் என்றும், பொய் சொல்வதையே அவர் கடந்த சில ஆண்டுகளாக தொழிலாக வைத்துள்ளார் என்றும், இப்போதும் முழுக்க முழுக்க பொய்யாக பேசி உள்ளார் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இப்போது அவருக்கு என்னுடைய குற்றச்சாட்டால் பயம் வந்துவிட்டது என்றும், அவருக்கு திரையுலகில் முன்பு இருந்த ஆதரவு இல்லை என்றும், அவரது நண்பர்களே அவருடைய குணம் தெரிந்து அவரை விட்டு விலகி விட்டனர் என்றும் கூறினார்.

இனிமேலும் அவர் பொய் சொல்லி பல பலனளிக்க போவதில்லை என்றும் அவர் அவருடைய குணம் பற்றி எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார். தனுஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement