• Jan 18 2025

ஷங்கரின் அடுத்த படத்தில் அவருடைய மகள் அதிதி ஷங்கர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவருடைய சினிமா எதிர்காலமே ’கேம் சேஞ்சர்’ படத்தில் தான் உள்ளது என்றும் அந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே அவரை நம்பி பெரிய பட்ஜெட் படத்தை தயாரிப்பாளர்கள் ஒப்படைப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ’இந்தியன் 2 ’ படத்தில் தேவையில்லாத பாடல் காட்சிகள் இருந்தது என்றும் குறிப்பாக உலக அழகி நடனமாடிய காலண்டர் பாடல் படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் உள்ளது என்றும் மேலும் அந்த பாடலில் ஆபாச உடை அணிந்திருந்தனர் என்றும் உங்கள் மகள் அதிதியை இதுபோன்று ஆடை அணிந்து நடிக்க வைப்பீர்களா என்றும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டனர்.

இந்த நிலையில் ஷங்கர் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் அதிதி ஷங்கர் தான் நாயகி என்றும் இந்த படத்தின் கேரக்டருக்கு அதிதி ஷங்கர் பொருத்தமாக இருப்பார் என்றால் அவரை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.



இந்த படத்தை ஷங்கர் உதவி இயக்குனர்களில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் நாயகன் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’இந்தியன் 2’ என்ற மோசமான படத்தை எடுத்து எங்களை கொலை செய்தது போதாதா? அதிதி ஷங்கரையும் உங்கள் படத்திலேயே நடிக்க வைக்கிறீர்கள், குடும்பத்தோடு கொலை செய்ய கிளம்பி விட்டீர்களா? என காமெடியாக நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement