• Mar 26 2025

STR 49 படத்தில் கதாநாயகியாக நடிகை சாய்பல்லவி..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

அமரன் படத்தின் வெற்றியினை தொடர்ந்து நடிகை சாய்பல்லவி பல படங்களில் கமிட்டாகி வருகின்றார். நேற்றைய தினம் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகிய தண்டேல் திரைப்படமும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வைத்தியர் ,டான்சர் என பல திறமைகளை வைத்துள்ள இவர் அதிகமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் str இன் வரிசையில் இருக்கும் படமான str 49 படத்தில் சாய்பல்லவியை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகளில் "parking " பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளி வந்துள்ளது.


மற்றும் இப் படத்தில் காமெடி நடிகராக மீண்டும் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த மூன்று நடிகர்களினதும் கதாபாத்திரங்கள் கூட்டணி எவ்வாறு அமையும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம் மற்றும் இப் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement