• Apr 15 2026

விஜய் படத்தில் கொடூர வில்லியாக வாரிசு நடிகை..! யார் தெரியுமா..?

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜயின் இறுதி படமாகிய "ஜனநாயகன் " படத்தின் அரைவாசி படப்புடிப்புகள் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே இப் படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெட்ஜ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மற்றும் இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபத்திரத்தில் பொபி தியோல் ,மமிதா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


H வினோத் இயக்கத்தில் அடுத்த வருடம் பொங்கல் வெளியீடாக வரும் என எதிர்பார்க்க பட்டிருக்கும் இப் படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி வாரிசு நடிகை ஸ்ருதி காஷன் களமிறங்க உள்ளதாக திடீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


இவர் ஜனநாயகன் படத்தில் ஒரு கொடூரமான வில்லியாக தோன்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக இவரை பார்த்த ரசிகர்கள் வில்லியாக பார்ப்பதில் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர். மற்றும் இது தொடர்பான எதுவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement