தென்னிந்தியாவின் தமிழ் நடிகைகளில் ஒருவராக திகழ்பவரே மனோசித்திரா. இவர் அவள் பெயர் தமிழரசி மற்றும் நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார். குறைந்தளவு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென பல ரசிகர்களும் இருந்துள்ளனர்.
அந்த வகையில் நடிகை மனோசித்திரா பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் , வீரம் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையே பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதாவது வீரம் படத்தில் நடிகை தமன்னாவிற்கு தோழியாக உள்ள கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தினை ஆரம்பிக்கும் போது தமன்னா பாதியில் இறந்துவிடுவார் என்றும் இறுதியில் அஜித்திற்கு ஜோடியாக தன்னை விடுவதாகவும் கூறியிருந்தனர்.
ஆனால் போக போக அவர்கள் கூறியது உண்மை இல்லை என்பது எனக்கு தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், வீரம் படத்தினால் கதாநாயகியாக இருக்க வேண்டிய நான் இப்போது எந்த படங்களிலும் நடிக்காது உள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Listen News!