ஒரு சில குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் குஷ்பு சுந்தர் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வரும் இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் ஊடகங்களிற்கு பேட்டி அளிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் நீங்கள் கண்ணகியா என கேட்டதற்கு அவர் "சென்னைக்கு வந்து 38 வருஷம் ஆகுது 38 வருஷமா கண்ணகியா தான் வாழ்ந்திட்டு இருக்கன்; மனசில பட்டத பேசுவன் மனசில பட்டத செய்வன் ;அதில எந்த மாற்றமும் கிடையாது குஷ்பூ சுந்தர் எப்புடி இருந்தாலோ இன்னை வரைக்கும் அப்புடியே தான் இருக்கன் "என அதிரடியாக சிரித்த படி பதிலளித்துள்ளார்.
Listen News!