தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக திகழும் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது நடிப்பில் வெளியான படங்களின் மூலம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படம் உருவாகி வரும் நிலையில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடிக்கின்றார்.மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
முதலில் இந்த படத்தினை சூர்யா நடிக்க இருந்தார் ஆனாலும் தவிர்க்கமுடியாத காரணங்களினால் இப் படத்தில் இருந்து விலகினார்.இப் படத்திற்கு சூர்யா நடிக்க ஆரம்பித்த போது புறநானூறு என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது அந்த தலைப்பு தவிர்க்கப்பட்டது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது இப்படத்திற்கு "1965" என்ற தலைப்பை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Listen News!