தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் திருமணத்தின் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் இவர் தனது 15 ஆண்டுகளுக்கு மேலான காதலர் ஆண்டனி உடன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
பாலிவுட் சினிமாவின் பக்கம் செல்ல வேண்டும் என கீர்த்தி ஆசைப்பட்ட நேரத்தில் தான் மைதான் திரைப்பட வாய்ப்பு நடிகையை தேடி வந்தது.இருப்பினும் குறித்த அந்த வாய்ப்பு ஒரு சில பிரச்சனைகளின் காரணமாக கை நழுவிப் போனது. இருந்தாலும் நம்பிக்கையுடன் காத்திருந்த கீர்த்தி சுரேஷை பாலிவுட்டில் பிரமாண்டமாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் அட்லி.
திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் தனது முதல் படமான "பேபி ஜான்" ஹிந்தியில் நடித்திருந்தார். இருப்பினும் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனால் இதுவரை இந்த படத்தின் விபரங்களை கீர்த்தி வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் அவர் அந்த புதிய பாலிவுட் படம் குறித்த குட் நியூசினை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இருக்கின்றது.மேலும்
Listen News!