தமிழ் சினிமாவுக்கு "செல்லமே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால் ஆவார். இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் சமீபத்தில் இவரது படங்கள் ஓடாத நிலையில் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த திரைப்படமே மார்க் ஆண்டனி திரைப்படம் ஆகும்.

இந்த நிலையிலேயே இவரது அடுத்த படமான ரத்னம் திரைப்படத்திற்கு சம்பள பிரச்னை ஏற்றப்பட்டுள்ளது. சிங்கம் , சாமி ,பூஜை போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் விஷால் , பிரியா பவானி சங்கர் , கௌதம் வாசுமேனன் ,சமுத்திர கனி,யோகி பாபு என பல பிரபலங்கள் இணைந்து நடிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த நிலையிலேயே குறித்த படத்தில் விசாலிற்கு 2.60 கோடி ரூபாய் செலுத்தாமல் நிலுவையாக உள்ளது என நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டது. நிலுவையாக உள்ள தொகையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் விஷால் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!