• Jan 18 2025

என்னது லோகேஷ் படத்துல லாரன்ஸ் மாஸ்டரா ? ஹீரோயின் யாருனு தெரிஞ்ச ஷாக் ஆகிருவிங்க!

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர்களுக்கு அதிகமான ரசிகர்  பட்டாளம் இருப்பது வழக்கமான ஒன்றே ஆனால் இயக்குநருக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது என்றால் அது லோகேஷ் கனகாஜ் மட்டுமே எனலாம். "மாநகரம்" திரைப்படதின் மூலம்  இயக்குனராக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து கைதி ,மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கி சராசரி வெற்றியை கொடுத்திருந்தார். 


சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியாகிய பிளாக் பாஸ்டர் திரைப்படங்கள் விக்ரம் பாகம் இரண்டு மற்றும் லியோ ஆகும். அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜனி காந்தை வைத்து "தலைவர் 171" திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.இவ்வாறு ரஜனி ,கமல்,விஜய் என முன்னணி  நடிகர்களை வைத்து பல ஹிட்களை கொடுத்த இவர் "G ஸ்குவார்ட்" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். 


தன்னுடன் இதுவரை அனைத்து திரைப்படங்களிலும் பணியாற்றிய துணை இயக்குனர்களை சிறந்த ஒரு இயக்குனர்களாக மாற்றுவதற்காகவே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையிலேயே "G ஸ்குவார்ட்" நிறுவனத்தினால் புதிய திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.


லோகேஷ் கனகராஜுடன் ஆரம்பத்தில் இருந்து பணியாற்றும் துணை இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் அடுத்த திரைப்படத்தை "G ஸ்குவார்ட்" தயாரிக்கின்றது. குறித்த படத்தில் லாரன்ஸ் மாஸ்டர் ஹீரோவாக நடிக்க உள்ளதுடன் லீட் ரோல் ஒன்றில் நயன்தாராவும் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கதாபாத்திரமும் முதலில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement