தமிழ் சினிமாவில் காமெடியின் கிங்காகவும், பாரம்பரிய நகைச்சுவை நடிகராகவும் பிரபலமான வடிவேலு, சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தனது மனக்கஷ்டத்தை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.
அவரின் குறிப்பு, தற்போது தமிழ் சினிமா மற்றும் தனிப்பட்ட திரைப்பட பிரபலர்களை குறிவைக்கும் சில யூடியூப் சேனல்கள் குறித்ததாக காணப்படுகிறது. இவை தவறான தகவல்களையும், அவதூறான விமர்சனங்களையும் வெளியிட்டு, ரசிகர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று வடிவேலு புகாரில் தெரிவித்துள்ளார்.
வடிவேலு தனது பேச்சில் மேலும் கூறியதாவது, "நாங்கள் நடிகர்கள். ஆனா இப்ப, யூடியூபர்கள் நம்மை பற்றி தவறான தகவல்கள், அவதூறு, விமர்சனங்களோட பேசுறாங்க. அது மட்டும் இல்லாம, பொதுமக்கள் முன்னிலையில் நம்மளே கேவலப்படுத்துறாங்க. இதுக்கு ஒரு full stop வைக்கணும்."
இந்தக் கூற்றுகள், கூட்டத்தில் இருந்த நடிகர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
வடிவேலுவின் புகாரைத் தொடர்ந்து, நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான கருணாஸ், அதிகாரபூர்வமாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." எனக் கூறியுள்ளார்.
Listen News!