• Nov 22 2025

அட்லீயின் பிறந்தநாளில் வைரலான அல்லு அர்ஜுனின் பதிவு.! அப்படி என்ன சொன்னார் தெரியுமா.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரை உலகின் இரு சக்திவாய்ந்த பிரமுகர்கள் தற்போது ஒரே படத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் யாரென்றால் ஒருபுறம் பான் இந்தியா ஸ்டாராக வெற்றிக்கொடி நாட்டிய அல்லு அர்ஜுன், மறுபுறம் தமிழ் சினிமாவின் மாஸ் ஸ்பெஷலிஸ்ட் இயக்குநர் அட்லீ. 


இருவரும் தற்போது ஒரு பெரிய திரைப்படத்தில் இணையவிருப்பதோடு, அல்லு அர்ஜுன் இன்று அட்லீயின் பிறந்தநாளிற்காக பகிர்ந்த வாழ்த்து செய்தி, சமூக ஊடகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இயக்குநர் அட்லீ தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதோடு பல திரைபிரபலங்கள் வாழ்த்தும்  தெரிவித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் மிகவும் சிறப்பானதாக இருக்கக்கூடியது அல்லு அர்ஜுனின் பதிவு தான்.


அவரது X தளத்தில், “நீங்கள் உருவாக்கி வரும் சினிமா மேஜிக்கை அனைவரும் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். அத்துடன் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து  வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement