• Feb 23 2025

நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை! நடந்தது என்ன? முழு விபரம் உள்ளே!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் எஸ்.வி. சேகருக்கு சென்னை சிறப்பு நீதி மன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என திரையுலகில் பன்முக திறமை கொண்டவர் எஸ்.வி. சேகர். மேலும் இவர் அரசியல்வாதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட விவகாரத்தில் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.


குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதன் காரணமாக ஒரு மாதம் சிறை தண்டனை மட்டுமல்லாமல், ரூ. 15 ஆயிரம் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது. எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement