• Jan 19 2025

உறுதியா இருந்தா உடைக்க யாராவது வருவாங்க... அத சொல்லி அம்மா அழுவாங்க... சோகத்தை பகிர்ந்த நடிகர் மணிகண்டன்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மணிகண்டன். இதன் பின்னர் இவர் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த குட் நைட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.


மணிகண்டன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் lover திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மணிகண்டன், நாம் எவ்ளோ தைரியமாக இருந்தாலும் வீட்டில் இருக்கிறவர்களை சமாதானப்படுத்துவது தான் கஷ்டம். 


என்னுடைய அம்மா தினமும் சாப்பாடு போட்டு விட்டு அழுவாங்க, அவன பாரு 30 ஆயிரம் சம்பளம் வாங்குறான் என்று சொல்வார்கள். அது பற்றி யோசிக்காமல் டப்பிங் வேலை வந்தால் சென்றுவிடுவேன். நீங்கள் இவ்ளோ உறுதியாகி இருந்தாலும் அதை உடைக்க வீட்டுல இருப்பவர்களை வருவாங்க. இதெல்லாம் கடந்து வந்து உறுதியாக இருந்தால் சாதிக்க முடியும் என்று மணிகண்டன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement