• Nov 12 2024

கர்ணன் பட நடிகைக்கு கல்யாணம்... காதலனை அறிவித்த ரஜிஷா விஜயன்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமா படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தற்போது தனது ரசிகர்களுக்காக ஒரு குட் நியூஸ் சொல்லியுள்ளார்.


கர்ணன் பிறகு ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில் மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறாராம். இவர்கள்  விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது.


தற்போது ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டோபின் தாமஸ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளனர். அதில், "1461 நாட்கள். இன்னும் ஒரு பயணம் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்...


Advertisement

Advertisement