• Aug 04 2025

"சந்தோஷமா இருக்கு..! " DNA குறித்து பேசிய நடிகர் அதர்வா..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ள நடிகர் அதர்வா சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சமீபத்தில் வெளியான DNA திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

குறித்த பேட்டியில் "DNA படம் எனக்கு ஒரு முக்கிய படமாக இருந்தது. அதற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு, விமர்சனங்களும் நல்லாவே இருக்கு. அதை பார்க்கும்போது ஒரு சற்று திருப்தி சந்தோஷம் இருக்கு. இது மாதிரி கதையை நாடும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதை இது நம்பச்செய்கிறது." என கூறியுள்ளார்.


இந்நிலையில் சினிமாவிலும் ஆன்மிகத்திலும் ஈடுபாட்டுடன் காணப்படும் அதர்வாவின் கோயில் தரிசன புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement