தளபதி விஜய் இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதை சிறப்பிப்பதற்காக இன்று இவரது இறுதி படமான "ஜனநாயகன்" படத்தின் சிறிய வீடியோ கிளிம்ஸ் ஒன்று இன்று 12 மணிக்கு வெளியாகியது. இவர் அரசியலுக்கு சென்றுள்ளமையால் இந்த திரைப்படம் இறுதி படம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் ரசிகர்கள் பிரபலங்கள் என பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதைவிட சீமான் ,நயன்தாரா என்பவர்கள் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் சீமான் நேரடியாக அரசியல் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
Listen News!