• Jan 19 2025

ஆண்டுக்கு 4 படம் நடிக்க போகும் டாப் ஸ்டார்..!! அவரே சொன்ன குட் நியூஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்பவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளிக்குப் பிறகு தற்போது அந்தகன் படத்தின் மூலம் மாசாக கம்பேக் கொடுத்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்  தான் அந்தகன் திரைப்படம். நடிகர் பிரசாந்தின் ஐம்பதாவது படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதற்காக பல இன்னல்களுக்கு மத்தியில் தியாகராஜன் அந்த படத்தை வாங்கி இருந்தார். அந்தப் படத்தை அவரே இயக்கியும் இருந்தார்.

இந்த திரைப்படத்தில் பிரசாந்துடன் சிம்ரன் மீண்டும் இணைந்துள்ளார். இவர்களுடன் பிரியா ஆனந்த், ஜோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். தற்போது வரையில் இந்த படம் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.


இன்னொரு பக்கம் நடிகர் பிரசாந்த் இளையதளபதி விஜயுடன் கோட் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் காணப்படுகின்றது. கோட் திரைப்படமும் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் அளித்த பேட்டி ஒன்றில்  ஆண்டுக்கு நான்கு படங்கள் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட இயக்குனர்களுடன் என்றில்லை அனைத்து இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement