• Sep 13 2026

இணையத்தில் லீக்கான வேட்டையன் பட பாடல்! பெரும் தலையிடியில் படக்குழுவினர்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தான் வேட்டையன். அத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த்.

வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என இதன் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அத்துடன் அன்றைய தினத்திலேயே சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.

வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிர்தாபச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றார்கள். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய பிஜே ஞானவேல் இயக்கியுள்ளார்.


வேட்டையன் திரைப்படம் போலி என்கவுண்டருக்கு எதிராக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படத்திலிருந்து மனசிலாயோ பாடலின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரலாகி உள்ளன.


குறித்த காட்சிகளில் ரஜினி மாஸாகநடனமாடி உள்ளதோடு  அவருடன் அனிருத்தும் இணைந்து நடனமாடி உள்ளார். இந்த பாடல் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படக் குழுவினர் வெளியிடும் முன்பே இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளமை பெறும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.


 

Advertisement

Advertisement