• Sep 02 2026

யாஷின் மாஸ் இமேஜுக்கு விழுந்த பேரிடி.. 'டாக்சிக்' பட வசூலால் ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

‘KGF’ மற்றும் ‘KGF 2’ திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தவர் நடிகர் யாஷ். குறிப்பாக, ‘KGF 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், யாஷ்ஷின் அடுத்த படமான ‘டாக்சிக்’ மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் யாஷுக்கு சகோதரியாக நயன்தாரா நடித்திருந்தார். கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், வெளியான பிறகு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.


படத்தில் தொடர்ச்சியான வன்முறை காட்சிகள், படுக்கையறை காட்சிகள் மற்றும் ரசிகர்களை ஈர்க்காத திரைக்கதை ஆகியவை படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு முக்கிய காரணங்களாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதன் தாக்கம் வசூலிலும் எதிரொலித்துள்ளது.

படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், ‘டாக்சிக்’ உலகம் முழுவதும் சுமார் ரூ.313 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழாம் நாளில் மட்டும் சுமார் ரூ.8 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இணை தயாரிப்பாளரான யாஷுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Advertisement

Advertisement