• Oct 14 2026

விஜய் முதல்வரானதால் எல்லாமே மாறிடுச்சு… நடிகர் ஆண்டனி வர்கீஸ் வெளிப்படையான பேச்சு

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'm Game’ திரைப்படத்தின் விழாவில் அவர் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை குறித்தும், ‘மாஸ்டர்’ படத்தில் தவறவிட்ட வாய்ப்பு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.


ஆண்டனி வர்கீஸ் கூறுகையில், “தமிழில் ‘மாஸ்டர்’ படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு மிஸ் ஆகிவிட்டது. அந்த கதாபாத்திரம் அர்ஜுன் தாஸுக்கு சென்றது. இப்போது விஜய் சார் தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். அதனால் இனிமேல் அவருடன் இணைந்து நடிப்பது சாத்தியமா என்று தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ஆண்டனி வர்கீஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருப்பது அவரது பேச்சின் மூலம் தெரியவந்துள்ளது.

‘மாஸ்டர்’ பட வாய்ப்பை தவறவிட்டது முதல் தற்போது விஜய் அரசியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது வரை ஆண்டனி வர்கீஸ் பேசிய இந்த கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.

Advertisement

Advertisement