தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தி, தற்போது பல்வேறு சுவாரஸ்யமான படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், அவருடன் இயக்குநர் மோகன் ராஜா இணையும் புதிய திரைப்படம் குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், அவரது முந்தைய வெற்றிப்படங்களான ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ மற்றும் ‘தனி ஒருவன்’ ஆகிய இரு படங்களின் கலவையாக இருக்கும் என அவரே தெரிவித்துள்ளார். இதனால் இப்படம் ஆக்ஷன், குடும்ப உணர்வு மற்றும் வலுவான கதைக்களம் என பல அம்சங்களைக் கொண்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் ராஜா, “கார்த்தியுடன் நான் இயக்கும் அடுத்த படம் ‘எம்.குமரன்’ மற்றும் ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களின் கலவையாக இருக்கும். படப்பிடிப்பு டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடங்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும். கார்த்தி சகோதரருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
மோகன் ராஜாவின் இந்த வெளிப்படையான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!