விஜய் டிவியின் "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிமுகமான பாலா, தனது தனித்துவமான கவுண்டர் பன்ச் நகைச்சுவை மூலம் ரசிகர்களிடம் விரைவாக பிரபலமானார்.
விஜய் டிவியில் தொடர் வாய்ப்புகள் கிடைத்ததுடன், மக்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டியதாலும், பாலா மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ஆனால், சமீபத்தில் அவருடைய பண உதவி குறித்து கேள்விகள் எழுந்து, “இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது?” என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“பாலா சாதாரண டிவி ஆங்கராக இருந்து சினிமா வரை வந்தது சிலருக்கு பொறாமையாகியுள்ளது.
’காந்தி கண்ணாடி’ படம் இயற்கையாகவே நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், அதற்கான திரையிட வாய்ப்பு குறைந்தது. காரணம், அப்போது வெளியான சிவகார்த்திகேயனின் படம். பாலாவின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் தான் அவரை குறிவைத்து அவதூறு பரப்பப்படுகிறது. உண்மையான மீடியாக்காரர்கள் இப்படி செய்வதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!