தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகம் கடந்த சில நாட்களில் ஒரு பெரிய இழப்பைச் சந்தித்தது. காமெடியன் மற்றும் நடிகராக மக்கள் மனதில் ஒரு நேர்மையான கலைஞராக விளங்கிய ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தி, அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.
அவரின் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பம் பெரும் மனவேதனையில் இருக்கிறது. இந்த நேரத்தில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட உரையுடன் அவரது மகள் இந்திரஜா, தன் தந்தையின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவரது இந்த உரை, ஏராளமான ரசிகர்களின் இதயத்தைத் தொட்டுள்ளது.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, சமூக வலைத்தளத்தில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, மிகவும் துயரத்துடனும், ஆனால் வலிமையுடனும் கீழ்க்கண்ட பதிவை வெளியிட்டுள்ளார்:
“நீங்க இல்லாமல் மூணு நாட்கள் ஆகிவிட்டது. எங்களை நிறைய சிரிக்க வைச்சதும் நீதான். இப்போ நிறைய அழவைக்கிறதும் நீதான். இந்த மூணு நாள் எனக்கு உலகமே தெரியல… நீ இல்லாம நம்ம பேமிலியை நாங்க எப்படி கொண்டு போக போறோம்னு தெரியல.”
“ஆனா, நீ எனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி கண்டிப்பா நான் ஸ்ட்ராங்கா இருப்பேன். என்ர மகன் இந்த மூணு நாளா தேடுறான் அப்பா… நீ சொல்லிக் கொடுத்த மாதிரி விமர்சனங்களுக்கு பயப்பட மாட்டேன். கண்டிப்பா உன்னோட பொண்ணுன்னு பெயரைக் காப்பாத்துவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த உரையில் காணப்படும் பாசமும், வலி கலந்த உறுதியும், ஒரு தந்தை-மகள் உறவின் உண்மையான பிணைப்பை பிரதிபலிக்கிறது.
Listen News!