• Sep 28 2025

சிங்கம் சூர்யா வீட்டில் பதுங்கியிருந்த மோசடி கும்பல்! 2.5 கோடி அபேஸ்! சிக்கியது எப்படி?

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் கறுப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கூடிய விரைவிலேயே ரிலீஸ் ஆக உள்ளது.  மேலும் தெலுங்கு இயக்குநர் இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகின்றார்  சூர்யா. 

இந்த நிலையில் நடிகர் சூர்யா வீட்டில் பணியாற்றிய சுலோக்சனா  என்ற பெண்  சூர்யாவின் பாதுகாவலரிடம் இருந்து சுமார் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதனால் அவர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில்,  இது தொடர்பில் பலரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என  காவல்துறை தரப்பினர்  மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி வந்தனர். 


இவ்வாறான நிலையில்  சூர்யா வீட்டில்  இடம் பெற்ற மோசடி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அதன்படி சூர்யாவிடம் தனி பாதுகாவலராக பணியாற்றி வந்த அந்தோணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

குறித்த புகாரில்  சூர்யா வீட்டில் பணியாற்றிய சுலோக்சனா என்பவர் அவருடைய  இரண்டு மகன்கள் மற்றும் சகோதரி ஒருவருடன் இணைந்து  மொத்தமாக நான்கு பேரும் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக 42 லட்சம் மோசடி  செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பிலேயே நான்கு பேரும் கைது செய்யப்பட்டு  விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் அந்த  மோசடிக்கு மூளையாக செய்யப்பட்டது சுலோக்சனா என்பதும் அவருக்கு அவருடைய குடும்பத்தினர் உதவி செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சுமார் 2.5 கோடி அளவுக்கு மோசடி செய்ததும்,  அதே பாணியில் பலரிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது . தற்போது அவர்களிடம்  மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதோடு அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரும் உள்ளனரா என்பது தொடர்பிலும் விசாரணை  நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




 

Advertisement

Advertisement