கோட் திரைப்படம் எதிர்வரும் 5ஆம் திகதி வெளிவராயிருக்கிறது. இப்படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக டாப் ஸ்டார் பிரஷாந்த் நடித்துள்ளார்.

90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்த பிரஷாந்த், அந்தகன் திரைப்படத்தின் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார். அந்தகன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரஷாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் GOAT. இப்படத்தில் விஜய்யின் நண்பராக பிரஷாந்த் நடித்துள்ளார்.

விஜய்யை எப்படி திரையில் காண ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்களோ, அதே அளவிற்கு பிரஷாந்தின் நடிப்பை காண ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பிரஷாந்த் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
Listen News!