• Sep 04 2026

10 நாட்களில் வாழை செய்த வசூல்... ப்ளாக் பஸ்டர் வெற்றிதான்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம். முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக பெற்று வந்தது.


10 நாட்களை கடந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாழை திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.


வாழை வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் பைசன். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement