• Sep 09 2024

நினைத்ததை சாதித்த விஜயா.. ரோகிணிக்கு வந்த போன் கால்! பெரும் துயரில் கோபி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா ஸ்ருதியின் அம்மாவிடம் உங்க பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணி திருத்தி வைக்குமாறு சொல்ல, அவள் நான் சொன்னாலும் கேட்க மாட்டா நீங்களே ஏதாவது பண்ணுங்க என்று சொல்லி செல்லுகிறார்.

அதன் பின்பு ரோகினிக்கு ஹாஸ்பிடலில் இருந்து கால் வருகின்றது. அவருடைய அம்மா அட்மிட் ஆகி இருப்பதாக.. இதனால் ரோகிணி அங்கிருந்து கிளம்பி விடுகின்றார். பிறகு சுதா செல்லும் வழியில் மீனா பூ கட்டிக்கொண்டு இருக்க, அங்கு சென்று என் பொண்ண காசுக்காக வளைச்சி போட பாக்குறீங்களா? இதுதான் உனக்கும் உன் புருஷனுக்கும் வேலையா என பேச, மீனா சரியான பதிலடி கொடுத்து அனுப்புகின்றார்.

சுதா சென்றதும் அங்கு வந்த முத்து என்ன நடந்தது என்று கேட்க, மீனா சமாளிக்கின்றார். ஆனால் மீனாவுடன் இருந்த பெண்ணொருவர் நடந்த விஷயங்களை சொல்ல, முத்து மீனாவை கூட்டிக்கொண்டு நேராக வீட்டுக்கு வந்து ஸ்ருதியுடன் சண்டை போடுகின்றார். இதை கேட்டு விஜயா சந்தோஷப்படுகின்றார்.


மேலும் ஸ்ருதியும் மீனாவும் சண்டை போடுவதைப் பார்த்து இனி மீனா கூட பேசாத அவளுடைய தராதரம் இப்படித்தான் என்று நன்றாக ஏற்றி விடுகின்றார். ஆமாம் நீங்கள் சொன்னதை கேட்டு இருக்கணும் நான் இனி மீனா கூட கதைக்க மாட்டேன் என ஸ்ருதி  சொல்லுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொட்டில், கோபி மார்னிங் வாக்கிங் போகும்போது எல்லோரும் பாக்யாவின் வீட்டில் சூழ்ந்து இருப்பதை பார்த்து நேராக வீட்டிற்குள் செல்கிறார். அங்கு ராமமூர்த்தி இறந்ததாக சொல்ல அவர் நம்பவில்லை. ஆனாலும் அதன் பின்பு ராமமூர்த்தியை பார்த்து அழுகின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்து ராதிகாவிடம் சொல்லி ராதிகாவையும் மையூவையும்  ராமமூர்த்தியை பார்க்க கூட்டிச் செல்கின்றார். அங்கு சென்று ராமமூர்த்திக்கு பக்கத்தில் இருந்து அழுது கொண்டு உள்ளார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement