• Jan 18 2025

'ஒரு நாள் நான் வாழ்வேன்..' கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' பட பாடல்! மெய் மறக்கும் இசையில் யுவனின் மாயாஜாலம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக அறிமுகம் ஆன போதே கவினுக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரசிகைகளாக மாறினர்.  அதன் பின்னர் அந்த சீரியலில் ஹீரோவாகவே கவின் மாறினார். 

இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இதன் பின்னர் படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன. அதன்படி இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட், டாடா போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.


இதை தொடர்ந்து, இவர் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரைக் கரம் பிடித்தார். அதன்பின், மீண்டும் தனது படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வருகிறார் கவின்.

இந்த நிலையில், தற்போது கவின் நடித்து வரும் 'ஸ்டார்' படத்தில்  இடம்பெற்ற பாடல் ஒன்று, தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையவுள்ள நிலையில், இந்த படத்தின் டீசர், டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாம்.


இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்றைய தினம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்து பாடிய மெலோடி பாடல் சற்றுமுன் வெளியாகி வைரலாகி உள்ளது.


மேலும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி பொலங்கர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ என்ற பாடல் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் பிறந்த நாளில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement