• Jan 19 2025

'அமரன்' படத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? விஜய் தொடர்ந்து மரியாதை செலுத்தும் எஸ்கே!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் 'அமரன்' . சற்று முன்பு அதன் டீசர்  வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கம்பீரமான ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அந்த படத்தில் அவரது  கேரக்டரின் பெயர் முகுந்தன் என்பதை சற்றுமுன் வெளியான டீசரில் அறிய முடிந்தது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி' திரைப்படத்தில் அதில் அவர் ராணுவ வீரராக நடித்திருந்தார்.

அதன்போது, நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்த் அவர்களின் குடும்பத்தாரை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.


காஷ்மீரில் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த்  மரணம் அடைந்த நிலையில், அவரது மூன்று வயது மகளுடன் விஜய் விளையாடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகியது.

தற்போது விஜயை அடுத்து மரணம் அடைந்த மேஜர் முகுந்த்  அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிவகார்த்திகேயனும் அதே கேரக்டரில் அமரன் படத்தில்  நடித்துள்ளார் என தெரியவருகிறது.

ஆக மொத்தத்தில் மேஜர் முகுந்த் மறைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவரை மறக்காமல் தமிழ் சினிமா அவ்வப்போது அவரது மரணத்தை பெருமைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement